Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மார்ச் (ஹி.ச.)
மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் 100% வாக்களிப்பை உறுதி செய்யும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் குமரகுருபரன் தொடங்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,
வாக்குப்பதிவுவை அதிகரிக்கும் பொருட்டு என் வாக்கு என் உரிமை என்ற தலைப்பில் விழிப்புணர்வை முன்னெடுப்போம் முன்னெடுத்துள்ளோம்,
ஏற்கனவே பழுது நீக்கப்பட்டு சரி பார்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் தயாராக உள்ளது, பதினாறு தொகுதிகளையும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்க அறைகள் தயார் செய்யப்பட்டிருக்கிறது இரண்டு அல்லது மூன்று நாட்களில் அந்தந்த தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும்.
28.3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர், 4079 வாக்குபதிவு மையங்கள் உள்ளன 835 பதட்டமான வை என கண்டறியப்பட்டுள்ளது, அந்த மையங்கள் முழுமையாக மத்திய போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் சி.சி.டி.வி மூலம் கண்காணிக்கப்படும் என்றார்.
தேர்தல் பறக்கும் படை விதிமீறல்கள் ஈடுபடுவதாக வந்த புகாரின் அடிப்படையில் அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது, 10 லட்சத்துக்கு அதிகமான பணம் பிடிபட்டால் மட்டுமோ வருமானவரித்துறைக்கு தகவல் கொடுப்போம் மற்றபடி 10லட்சத்திற்கு குறைவான பணம் என்றால் வாகன சோதனையின் போது கையில் ஆவணம் இல்லை என்றாலும் பின்னர் ஆவணத்தோடு வந்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ