இரு வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ 1.78 லட்சம் மற்றும் ரூ.65,000 ரொக்கம் பறிமுதல்
திருச்சி, 24 மார்ச் (ஹி.ச.) திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்றத் தொகுதியில் ஏலூர் பட்டி சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் விமலா தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ், தலைமை காவலர் சகிலா, மற்றும் இரண்டாம் நிலை காவலர் விவேக் ஆகியோர்
Money Seizure


திருச்சி, 24 மார்ச் (ஹி.ச.)

திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்றத் தொகுதியில் ஏலூர் பட்டி சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் விமலா தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ், தலைமை காவலர் சகிலா, மற்றும் இரண்டாம் நிலை காவலர் விவேக் ஆகியோர் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு வேகமாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்ததில் திருச்செங்கோடு அருகேவேல கவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்தசெல்வராஜ் என்பவர் காய்கறி விற்றுவிட்டு உரிய ஆவணங்கள் இன்றி தனது வேனில் ரூபாய் 1,78,760/- ஐ கொண்டு வந்தார். உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த பரிசோதனை முடிவதற்குள அங்கு வந்த மற்றொரு வேனை பரிசோதனை செய்ததில் வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (33) என்பவர் மாங்காய் விற்ற பணம் ரூ.65 ஆயிரத்தை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்தார். இதன் காரணமாக இந்த பணத்தையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த இரண்டு பணங்களையும் முசிறி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லோகநாதன் இடம் ஒப்படைத்தனர்.

இரண்டு பணங்களும் சீல் வைக்கப்பட்டு முசிறி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இரண்டு வேண்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 லட்சத்து 43 ஆயிரத்து 760 பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / ANANDHAN