Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மார்ச் (ஹி.ச.)
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிகள் தொகுதிப் பங்கீடு மற்றும் வியூகங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
*தி.மு.க கூட்டணி*
திமுக கூட்டணியில் காங்கிரஸ்,ம.தி.மு.க இந்திய கம்யூனிஸ்ட்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,
விடுதலை சிறுத்தைகள்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
தே.மு.தி.க,
மனிதநேய மக்கள் கட்சி,
மக்கள் நீதி மய்யம்,
மக்கள் விடுதலை கட்சி,
ஆதித்தமிழர் பேரவை,
அகில இந்திய பார்வர்டு பிளாக்,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,
எஸ்.டி.பி.ஐ,
மனிதநேய ஜனநாயகக் கட்சி,
முக்குலத்தோர் புலிப்படை,
கொங்கு இளைஞர் பேரவை,
திராவிட வெற்றிக் கழகம்,
புதிய திராவிட கழகம்,
ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி,
ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
இந் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு தி.மு.க சார்பில் ஏற்படுத்தப்பட்டது.
அதில்,ம.தி.மு.க, உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது.
*தி.மு.க தொகுதி பங்கீடு*
காங்கிரஸ் - 28
மதிமுக - 4
ம.ம.க - 2
ஐ .யூ.எம்.எல்- 2
கொ.ம.தே.க- 2
கம்யூனிஸ்ட்- 5
மார்க்சிஸ்ட்- 5
மொத்தம் 234 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 48 தொகுதிகள் தி.மு.க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வி.சி.க. உடன் இரு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
இதில் வி.சி.க இரட்டை இலக்கத்தில் எண்ணிக்கை எதிர்பார்த்த நிலையில் தி.மு.க அதிக கட்சிகள் இணைந்துள்ளதால் குறைந்த தொகுதிகளை மட்டுமே தர முடியும் என்று தெரிவித்துள்ளது.
மீதமுள்ள கூட்டணி கட்சிகளுடன் தற்போது வரை பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது தி.மு.க.
*அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி*
அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ்,புதிய நீதி கட்சி,இந்திய ஜனநாயக கட்சி,தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்,பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
*அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு*
பாரதிய ஜனதா-27
பாட்டாளி மக்கள் -18
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் -11
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி -3
புதிய நீதிக்கட்சி - 2
இந்திய ஜனநாயக
கட்சி - 2
புரட்சி பாரதம் -1
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - 1
பெருந்தலைவர் மக்கள் கட்சி - 1 உள்ளிட்ட கூட்டணி உறுதியாகியுள்ளது.
மீதமுள்ள தொகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - 168 போட்டியிட உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் தி.மு.க - உடன் தொகுதி பங்கீடு உடன்பாடு இல்லாத காரணத்தால் வெளியேறிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கு அ.தி.மு.க அழைப்பு விடுத்துள்ளது.
அதில், தனி சின்னத்தில் போட்டியிடவும் வன்னியர்கள் செல்வாக்கு மிக்க மூன்று தொகுதிகளில் போட்டியிடவும் அ.தி.மு.க சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வாறு,
த.வா.க. -அ.தி.மு.க-வுடன் இணையும் பட்சத்தில்
3-தொகுதிகள் ஒதுக்கப்படலாம்.
அவ்வாறு ஒதுக்கப்பட்டால் அ.தி.மு.க 165 இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது.
*நாம் தமிழர் கட்சி*
சீமான் தலைமையில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சி கூட்டணியின்றி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.
*தமிழக வெற்றி கழகம்*
விஜய் தலைமையில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழகம் கட்சி தமிழகத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து களம் காண்கிறது.
Hindusthan Samachar / Durai.J