சட்டமன்றத் தேர்தல் 2026 - எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சார சுற்றுப் பயணம் அறிவிப்பு
சென்னை, 24 மார்ச் (ஹி.ச) தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, 25 மார்ச் முதல் 1 ஏப்ரல் 2
Edappadi Palaniswami


Sh


சென்னை, 24 மார்ச் (ஹி.ச)

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, 25 மார்ச் முதல் 1 ஏப்ரல் 2026 வரை தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

“மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற கோஷத்துடன் நடைபெறும் இந்த சுற்றுப் பயணத்தில், அ.தி.மு.க. மற்றும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்களில் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பங்கேற்க உள்ளார்.

அதன்படி, 25.03.2026 அன்று சென்னை மயிலாப்பூர் மற்றும் காஞ்சிபுரம் ஆலந்தூர் பகுதிகளில் பிரச்சாரம் தொடங்கப்படுகிறது. தொடர்ந்து 27.03.2026 அன்று செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், 28.03.2026 அன்று சென்னை ஆர்.கே.நகர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

29.03.2026 அன்று கன்னியாகுமரி நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி ராதாபுரம், 30.03.2026 அன்று தென்காசி கடையநல்லூர் மற்றும் தூத்துக்குடி கோவில்பட்டி, 31.03.2026 அன்று விருதுநகர் சிவகாசி மற்றும் இராமநாதபுரம் பரமக்குடி பகுதிகளில் பிரச்சார கூட்டங்கள் நடைபெறுகின்றன.

மேலும், 01.04.2026 அன்று சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் இந்த கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் நிறைவடைய உள்ளது.

இதன் மூலம் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Hindusthan Samachar / P YUVARAJ