Enter your Email Address to subscribe to our newsletters

நியூயார்க், 24 மார்ச் (ஹி.ச.)
ஈரான் மீது மேற்கொள்ளப்பட இருந்த தாக்குதலை ஐந்து நாட்கள் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்திருக்கும் நிலையில் டிரம்ப் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் மோதலின் ஒரு கட்டமாக ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் ஒன்றிணைந்து ஆகாய மார்க்கமாக கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி மிகக் கடுமையான தாக்குதலை நடத்தின. அந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அந்த நாடுகளின் ராணுவத் தளங்கள் உள்ள பகுதிகள் மீது தீவிரமான தாக்குதல்களைச் செய்தது.
இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா சபை, உலக சுகாதார நிறுவனம் போன்ற உலகளாவிய அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இருப்பினும், மூன்று வாரங்களுக்கு மேலாக இந்த மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஈரான் அணு உலைகள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது நடத்தப்படவிருந்த ராணுவத் தாக்குதல்கள் அனைத்தும் ஐந்து நாட்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
ஈரானுடன் விரைவில் ஒரு ஒப்பந்தம் ஏற்படும்.
சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்.
ஹார்முஸ் நீரிணைப் பாதை விரைவில் திறக்கப்படும். ஈரான் மீது நடத்தப்படுவது ராணுவ நடவடிக்கை மட்டுமே, இது போர் அல்ல.
ஈரான் அணு ஆயுதங்களை உபயோகிக்காது என்று உறுதி அளித்துள்ளது.
அமெரிக்காவும் ஈரானும் இணைந்து ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாப்போம்.
என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM