கம்பன் ரயில் சேவையை தடம் மாற்றியதை கண்டித்து திருவாரூரில் வணிகர்கள் 5000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டம்
திருவாரூர், 24 மார்ச் (ஹி.ச.) திருவாரூரில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு பயணம் செய்யும் பொதுமக்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினரும் பெருமளவில் பயன்படுத்தி வரும் கம்பன் ரயில் சேவையை தொடர்ந்து த
போராட்டம்


திருவாரூர், 24 மார்ச் (ஹி.ச.)

திருவாரூரில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு பயணம் செய்யும் பொதுமக்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினரும் பெருமளவில் பயன்படுத்தி வரும் கம்பன் ரயில் சேவையை தொடர்ந்து திருவாரூருக்கு இயக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று திருவாரூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை எடுத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீண்ட காலமாக செயல்பட்டு வரும் இந்த ரயில் சேவையை, காரைக்குடியில் இருந்து திருவாரூர் வழியாக இயக்குவதற்கு பதிலாக, பேரளம் வழியாக நேரடியாக காரைக்கால் பாதையில் மாற்றி இயக்கி வருகிறது.

இதனால் திருவாரூர் பகுதியைச் சேர்ந்த பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனை எதிர்த்து திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கம், பல்வேறு வர்த்தக அமைப்புகள்,சமூக அமைப்புகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கம்பன் ரயில் சேவையை ரத்து செய்யக்கூடாது, தொடர்ந்து திருவாரூர் வழியாக இயக்க வேண்டும், ரயில்வே நிர்வாகம் திருவாரூர் பகுதியை புறக்கணிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும், இன்று காலை 9 மணி முதல் நாளை 5 மணி வரை திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக வர்த்தகர்கள் மற்றும் அனைத்து கட்சிகளை சேர்ந்த நபர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / GOKILA arumugam