இன்றைய வர்த்தகத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய பங்குகள்
சென்னை, 24 மார்ச் (ஹி.ச.) பங்குச் சந்தையில் சமீபத்திய நிறுவன அறிவிப்புகள், முதலீட்டு தீர்மானங்கள், நியமனங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியவை முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இன்றைய வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய பங்குகள
இன்றைய வர்த்தகத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய பங்குகள்


சென்னை, 24 மார்ச் (ஹி.ச.)

பங்குச் சந்தையில் சமீபத்திய நிறுவன அறிவிப்புகள், முதலீட்டு தீர்மானங்கள், நியமனங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியவை முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இன்றைய வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய பங்குகள் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்:

இன்டெர் குளோப் ஏவியேஷன் :

நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக அலோக் சிங் நியமிக்கப்படுவதற்கு நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நியமனம் ஏப்ரல் 6 முதல் அமலுக்கு வருகிறது.

முன்னதாக, அவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமாக பணியாற்றியவர்.

கோல் இந்தியா :

சவுத் ஈஸ்டன் கோல் ஃபீல்டு நிறுவனத்தில் 25% வரை பங்குகளை OFS முறையில் விற்பனை செய்யவும், மேலும் IPO மூலம் கட்டங்களாக 10% வரை புதிய பங்குகளை வெளியிடவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், மகாநதி கோல் ஃபீல்டு நிறுவனத்தில் 25% வரை பங்குகளை IPO அல்லது பிற சந்தை வழிகளின் மூலம் விற்பனை செய்ய கொள்கை ரீதியான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜிஆர் இன்ஃப்ரா ப்ராஜக்ட்ஸ்:

பீகாரில் NH-33 தேசிய நெடுஞ்சாலையின் புதிய கிரீன் ஃபீல்ட் பிரிவை அமைக்கும் ரூ. 2,440.87 கோடி மதிப்பிலான பணியை NHAI வழங்கியுள்ளது.

ஜிஎன்ஜி எலக்ட்ரானிக்ஸ் :

ஐசிஐசிஐ வங்கியுடன் செய்யப்பட்ட கடன் ஒப்பந்தத்தில் திருத்தம் செய்து, கடன் வரம்பு ரூ. 40 கோடியில் இருந்து ரூ. 72 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், ஆக்சிஸ் வங்கியுடன் உள்ள நடைமுறை மூலதனக் கடன் வசதியும் ரூ. 44 கோடியில் இருந்து ரூ. 65 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி நிறுவனத்தின் வேலைநிறைவு மூலதனத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும்.

முதலீட்டாளர்கள் இத்தகவல்களை கவனத்தில் கொண்டு வர்த்தக முடிவுகளை எடுக்கலாம்.

Hindusthan Samachar / JANAKI RAM