புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
புதுச்சேரி, 24 மார்ச் (ஹி.ச.) புதுச்சேரியில் அடுத்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இண்டி கூட்டணியில் காங்கிரஸ் தி.மு.க, அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்ததால் குழப்பம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடித்
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


புதுச்சேரி, 24 மார்ச் (ஹி.ச.)

புதுச்சேரியில் அடுத்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இண்டி கூட்டணியில் காங்கிரஸ் தி.மு.க, அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்ததால் குழப்பம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடித்தது.

பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் தொகுதி பங்கீடு முடிவு எட்டப்பட்டது. காங்., - 16, தி.மு.க., 13, இந்திய கம்யூ, ஒரு தொகுதி என முடிவாகி உள்ளது.

இந்நிலையில் இன்று

(மார்ச் 24) சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 13 பேர் பட்டியல் வெளியானது. அதன் விபரம் பின்வருமாறு:

திமுக வேட்பாளர்கள்

1. வில்லியனுார் -சிவா

2.மங்கலம் - ரங்கன்

3.திருபுவனை - அங்காளன்

4.பாகூர் - செந்தில்குமார்

5.முதலியார்பேட்டை - சம்பத்

6.உப்பளம் - அனிபால் கென்னடி

7.உருளையன்பேட்டை- கோபால்

8.நெல்லித்தோப்பு - கார்த்திகேயன்

9.ராஜ் பவன் - விக்னேஷ் கண்ணன்

10.காலாப்பட்டு - செந்தில்

11.கதிர்காமம் -வடிவேலு

12.காரைக்கால் தெற்கு-நாஜிம்

13.நிரவி டிஆர் பட்டினம் நாக தியாகராஜன்

திமுக தலைமை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கியிருந்த நிலையில், 3 தொகுதிகளில் விசிக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை ஆகிய 3 தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது.

போட்டியிடாத மற்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு என அக்கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b