Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 24 மார்ச் (ஹி.ச.)
மயிலாடுதுறை - செங்கோட்டை இடையே இயக்கப்பட்டு வரும் விரைவு ரயிலானது, பராமரிப்பு பணிகள் காரணமாக கும்பகோணம்- மயிலாடுதுறை இடையே பகுதி தூரமாக ரத்து செய்யப்பட்டு, கும்பகோணத்தில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது, மார்ச் 25, 27, 30 மற்றும் ஏப்ரல் 1 ஆம் தேதி ஆகிய 4 தினங்களில் கும்பகோணத்தில் இருந்து மதியம் 1.08 மணிக்கு விரைவு ரயிலானது புறப்பட்டு செங்கோட்டை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அதற்கு ஏற்றால் போல் பயணிகள் தங்களது பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்ளவும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தல் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில் பகுதி நேர ரத்தால், பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். விரைவில் இதற்கு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பது அனைத்து பயணிகளின் எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.
Hindusthan Samachar / ANANDHAN