மலை ரயிலை வாடகைக்கு எடுத்த 5 ஜெர்மனி புகைப்படக் கலைஞர்கள்!
நீலகிரி, 24 மார்ச் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலா மையங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இந்த மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர். அவர்கள் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா
Hills Train


நீலகிரி, 24 மார்ச் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலா மையங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இந்த மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர்.

அவர்கள் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிடுவதுடன் மலை ரயிலில் பயணம் செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

மலை ரயில் பயணம் நீலகிரி மலைப்பகுதிகளின் இயற்கை அழகை நேரடியாக அனுபவிக்க வழிவகுப்பதால் இது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் நினைவில் நிற்கும் அனுபவமாக இருக்கிறது.

தற்போது உதகை மற்றும் குன்னூர் இடையேவும், உதகை மற்றும் மேட்டுப்பாளையம் இடையேவும் மலை ரயில் சேவை வழக்கமாக இயக்கப்பட்டு வருகிறது.

ஆனால் சுற்றுலா பயணிகள் அதிகரிக்கும் காலங்களில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஜெர்மனியை சேர்த்த 5 புகைப்பட கலைஞர்கள் மலை இரயிலை வாடகைக்கு எடுத்து குன்னூர் மேட்டுப்பாளையம் மலை இரயில் பாதையில் ஆங்காங்கே மலை இரயிலை நிருந்தி இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN