Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 24 மார்ச் (ஹி.ச.)
மே 5ம் தேதி திருவாரூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 43-வது வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் உதகையில் உள்ள வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தை வணிகர் சங்கத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் குறிப்பாக கார்ப்ரேட் வணிக நிறுவனங்களால் தமிழகத்தில் 15 லட்சம் கடைகள் இது வரை மூடபட்டு இருப்பதாகவும் எனவே தமிழகத்தில் கார்ப்ரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் என்றார்.
மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் வியாபாரிகள் பொருட்களை வாங்க செல்ல பணத்தை கொண்டு செல்ல முடிவதில்லை என்றும் தேர்தல் ஆணையம் வியாபாரிகள் இடையே கடுமையாக நடந்து கொள்வதற்கு கண்டனம் தெரிவித்தார்.
குறிப்பாக காரில் பயணம் செய்பவரிடம் சோதனை மேற்கொண்டு பணத்தை பறிமுதல் செய்யும் தேர்தல் ஆணையம் பேருந்துகளிலும் ரயில்களிலும் விமானங்களிலும் இதுபோன்ற சோதனையை நடத்த முடியுமா? என்று விக்கிரமராஜா கேள்வி எழுப்பினார்.
வணிகர்கள் 2 லட்சம் ரூபாய் வரை கொண்டு செல்ல தேர்தல் அனுமதிக்க வேண்டும். அது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கபட்டு உள்ளது.
வரும் 31 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னையில் போராட்டம் நடத்தபடும்.
அதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டமும், கடை அடைப்பு போராட்டமும் நடத்தபடும் என்றார்.
தமிழகத்தில் கேஸ் தட்டுப்பாடு காரணமாக ஏராளமான உணவகங்கள் மூடப்பட்டு அதன் உரிமையாளர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் அதேநேரம் கள்ளச் சந்தையில் சிலிண்டர்களை விற்பனை செய்தால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக எந்த கட்சி எழுத்து பூர்வமாக தங்களுக்கு உறுதி அளிக்கிறதோ அந்தக் கட்சிக்கு ஆதரவு அளிக்கபடும் என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN