Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 24 மார்ச் (ஹி.ச)
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
அதிக அளவு சுற்றுலா பயணிகள் முதல் மற்றும் இரண்டாவது சீசனின் போது வருவது வழக்கம். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசன் அனுசரிக்கப்படும் நிலையில் அப்போது பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
இதனால் அப்போது வரும் சுற்றுலா பயணி மகிழ்விக்கும் வகையில் மலர் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியை பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.
கடந்த ஆண்டு நடந்த மலர்கள் கண்காட்சியையும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.
இந்நிலையில், அடுத்த மாதம் கோடை சீசன் துவங்கும் நிலையில் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களும் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக nநடைபெற்று வருகிறது.
குறிப்பாக தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. 35000 தொட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர பூங்காவை மேம்படுத்தும் பணிகள் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பூங்காவில் பல்வேறு பகுதிகளிலும் நடவு செய்வதற்காக அலங்கார செடிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த அலங்கார செடிகள் பூங்காவில் பல்வேறு பகுதிகளில் உள்ள மலர் பாத்திகள், நடைபாதை ஓரங்கள் மற்றும் சரிவுகளில் நடவு செய்யப்பட உள்ளன.
மேலும் மலர் செடிகள் இல்லாத இடங்களிலும் இந்த அலங்கார செடிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்களை மேற்கொள்ள பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்
Hindusthan Samachar / vidya.b