வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தின் கீழ் கைது
சென்னை, 24 மார்ச் (ஹி.ச.) சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் அமைச்சுப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது 12 வயது மகள் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த சில ஆண்டுகளாக தனியார் அறக்
Pocso


சென்னை, 24 மார்ச் (ஹி.ச.)

சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் அமைச்சுப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது 12 வயது மகள் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த சில ஆண்டுகளாக தனியார் அறக்கட்டளை ஒன்றில் நடனம் பயின்று வருவதாக தெரிகிறது. இங்கு Good touch bad touch குறித்து கற்று தருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறுமி நேற்று வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் உறவினரான கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பரத் (31) என்பவர் நுழைந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த குழந்தை தான் நடனம் பயின்று வரும் அறக்கட்டளை நிர்வாகியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அவர் சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு 5 ஆண்டுகளாக பரத் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணைக்கு பிறகு பரத்தை போலீசார் கைது செய்தனர். கைதான பரத் தி.மு.க வழக்கறிஞர் பிரிவு பகுதி அமைப்பாளராக உள்ளார் என்பது தெரிய வந்தது.

கைதான பரத்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / P YUVARAJ