Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மார்ச் (ஹி.ச.)
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை ஜார்ஜ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மே 12ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு பொன்முடிக்கு மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக நீதிமன்றம் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்த போதிலும், இன்று அவர் நேரில் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சம்மனை எதிர்த்து Madras High Courtல் மனு தாக்கல் செய்துள்ளதாக பொன்முடி தரப்பு கூறியுள்ளது.
மேலும்,சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி,
முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் அடுத்த விசாரணை மே 12-ஆம் தேதி நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ