Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மார்ச் (ஹி.ச.)
வழக்கில் பேசக் கூடாது, சக குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பில் இருக்கக் கூடாது உள்ளிட்ட விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மறுஆய்வு செய்யக் கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இதனுடன், சங்கரின் தாய் கமலா தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தனது மகன் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிறையில் தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கமலா மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், ஆட்கொணர்வு மனுவே தள்ளுபடி செய்யப்பட்டதால், நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு தானாகவே பொருளற்றதாகி விட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, நீதிபதி வேல் முருகன் தலைமையிலான அமர்வு, மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் நாளையுடன் முடிவடைவதால், அவர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கான தகுந்த உத்தரவை வழங்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், சட்டத்திற்குட்பட்டு எவ்வாறு நடைமுறை மேற்கொள்ள வேண்டுமோ அதனை மேற்கொள்ளலாம் என விளக்கம் அளித்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ