சென்னை அருகே கொடூரம்..! சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக பிரமுகர் சித்தப்பா கைது..!
சென்னை, 24 மார்ச் (ஹி.ச.) சென்னை கோடம்பாக்கம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் இவருடைய மகன் பரத் (28). இவர் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றங்களில் ஜூனியர் வழக்கறிஞராக பணியாற்றி வருவதாக தெரிகிறது. ம
பாலியல் வன்கொடுமை


சென்னை, 24 மார்ச் (ஹி.ச.)

சென்னை கோடம்பாக்கம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் இவருடைய மகன்

பரத் (28). இவர் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றங்களில்

ஜூனியர் வழக்கறிஞராக பணியாற்றி வருவதாக தெரிகிறது.

மேலும் இவர் தி.மு.கவின் தியாகராய நகர் மேற்கு பகுதி வழக்கறிஞர் அணியில்

பணியாற்றி வருவதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இவருடைய மனைவியின், அக்கா மகளான ஏழாம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமிக்கு கடந்த 23.03.26 அன்று சென்னை அண்ணா நகர் திருமங்கலம் அருகே

உள்ள பாடி குப்பம் பிரதான சாலை பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய

குடியிருப்பில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிய வருகிறது.

இந்த நிலையில் உறவினர் வீடு என்பதால் அடிக்கடி பரத் தன்னுடைய மனைவியின் அக்கா வீட்டிற்கு வந்துள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சித்தப்பா என்கின்ற முறையில் பரத் இந்த குழந்தையிடம் நெருக்கமாக நெருங்கி பழகி வந்துள்ளார்.ஸஇதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரும் பரத் சிறுமிக்கு சித்தப்பா என்ற முறையில் இருப்பதால் அவர்களும் எதுவும் கண்டு கொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் பரத் அந்த 13 வயது சிறுமிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களது பெற்றோர் மருத்துவரிடம்

பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை குறித்து கேட்டு அறிந்த பொழுது அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரிய வந்தது.

இதுகுறித்து சிறுமியிடம் பெற்றோர்கள் கேட்ட பொழுது சித்தப்பா முறையில் உள்ள

பரத் தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை சிறுமி பெற்றோர்களிடம்

தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சென்னை அண்ணாநகர் திருமங்கலம்

நொளம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் பரத் மீது புகார்

அளித்தனர்.

இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த சென்னை அண்ணாநகர் திருமங்கலம்

நொளம்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வழக்கறிஞர்

பரத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam