விஜய்யை பின் தொடர்ந்த மாணவர் வாகன விபத்தில் உயிரிழப்பு - உயிரிழந்த மாணவர் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
தஞ்சாவூர், 24 மார்ச் (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடந்த விஜய் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற விக்ணேஷ்(19) என்கிற கல்லூரி மாணவர் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி நேற்று (மார்ச் 3 ஆம் தேதி) உயிரிழந்தார். அவருடைய பிரேத பரிசோதனை திருச
Tanjore


தஞ்சாவூர், 24 மார்ச் (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடந்த விஜய் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற விக்ணேஷ்(19) என்கிற கல்லூரி மாணவர் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி நேற்று (மார்ச் 3 ஆம் தேதி) உயிரிழந்தார்.

அவருடைய பிரேத பரிசோதனை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. தற்போது பிரேத பரிசோதனை முடித்து, அவரது சடலம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இறுதிச் சடங்கு செய்வதற்காக அவரது இல்லத்திற்கு அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

Hindusthan Samachar / ANANDHAN