டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - தாய் மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
திருவள்ளூர், 24 மார்ச் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்த தாய் ராஜகுமாரி 69, மகள் ஜெயபிரசாந்தி 42, ஆகிய இருவரும் 5 வயது குழந்தை ராகவர்ஸ்ஷினியுடன் கடந்த இரண்டு நாட்களுக
விபத்து


திருவள்ளூர், 24 மார்ச் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்த தாய் ராஜகுமாரி 69, மகள் ஜெயபிரசாந்தி 42, ஆகிய இருவரும் 5 வயது

குழந்தை ராகவர்ஸ்ஷினியுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில்

கும்மிடிப்பூண்டியிலிருந்து மஞ்சங்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு

சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வேர்க்காடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் லாரியின் பின்னால் மோதிய விபத்தில் தாய், மகள் இருவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் தாய் மகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடித்து துடித்து உயிரிழந்த நிலையில் ஐந்து வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

இந்த கோரச் சம்பவம் இலங்கை தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய

நிலையில் உறவினர்கள் வருகைக்காக கடந்த இரண்டு நாட்களாக அடக்கம் செய்யாமலே

பொன்னேரி பிணவறையில் உள்ள குளிரூட்டும் அருகில் வைக்கப்பட்டுள்ளது.

எந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்த

நிலையில் இந்த அதிர்ச்சியூட்டும் விபத்து குறித்தான சிசிடிவி காட்சிகள்

தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நின்றிருந்த லாரியில் இருசக்கர வாகன மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட

நிலையில் சிசிடிவி காட்சியின் வாயிலாக முன்னறிவிப்பு இல்லாமல் லாரி

நிறுத்தப்பட்டதும் அந்த லாரியில் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதும்

தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஆந்திர மாநில எல்லையான ஆரம்பத்தில் இருந்து சென்னை செங்குன்றம்

வரையிலும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் ஆங்காங்கே வாகனங்கள் எவ்வித

அறிவிப்பும் இல்லாமல்

நிறுத்தப்படுவதை ரோந்து போலீசார் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதே தொடர் விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் முக்கிய காரணியாக அமைகிறது என்பது

குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / GOKILA arumugam