Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 24 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் பணியாற்றும் வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் வரும் மார்ச் 28 அன்று நடைபெறவுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1,868 வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காகத் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு ஏற்கனவே பணியாணை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறும்:
பயிற்சி மையங்களின் விவரம்:
213. விளாத்திகுளம்: சி.கே.டி. மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, எட்டயபுரம், குமாரகிரி.
214. தூத்துக்குடி: காமராஜ் கல்லூரி, தூத்துக்குடி.
215. திருச்செந்தூர்: ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வீரபாண்டியன்பட்டணம்.
216. ஸ்ரீவைகுண்டம்: நாசரேத் மர்காஷியஸ் கல்லூரி, பிள்ளையான்மனை (கே.ஜி.எஸ் மேல்நிலைப்பள்ளிக்கு பதிலாக).
217. ஒட்டப்பிடாரம் (தனி): ஜான் டி பாப்பிஸ்ட் மேல்நிலைப்பள்ளி, புதியம்புத்தூர்.
218. கோவில்பட்டி: நாடார் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி.
வாக்குச்சாவடி பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்குச் சரியான நேரத்தில் வருகை தந்து பயிற்சியில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b