Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 24 மார்ச் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் சென்னை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், பெருங்களத்துார், வண்டலுார், சிங்கபெருமாள்கோவில், பரனுார், செங்கல்பட்டு புறவழிச்சாலை, இருங்குன்றபள்ளி, மாமண்டூர், மதுராந்தகம், சோத்துப்பாக்கம், அச்சிறுப்பாக்கம், தொழுப்பேடு ஆகிய இடங்களில், மேம்பாலங்கள் உள்ளன.
இந்த மேம்பாலங்களில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின் விளக்குகள், பல இடங்களில் முறையான பராமரிப்பின்றி, எரியாமல் உள்ளன.
தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரகணக்கான வாகங்கள் சென்று வருகின்றன.
சாலைகள் மற்றும் பாலங்களில் உள்ள உயர்கோபு மின்விளக்குகள் ஏரியாமல் உள்ளதால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
மேலும் மின் விளக்குகள் எரியாததால் கடந்த மூன்று ஆண்டுகளில், சாலை விபத்தில் 200 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
இதை தவிர்க்க, உயர்கோபுர மின் விளக்குகள் மற்றம் சாலையோர மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் பகுதியில், உயர் கோபுர மின் விளக்குகள் மற்றும் மின்விளக்குள், சாலை குறுக்கிடும் பகுதிகளில், மின்விளக்குகள் அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 8 கோடி ரூபாய், கடந்த ஆண்டு, நிதி ஒதுக்கீடு செய்தது.
அதன்பின், உயர்கோபுர மின் விளக்குகள் மற்றும் மின் விளக்குகள் அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததார்கள், கடந்த பிப்ரவரி மாதம் பணிகளை துவங்கினர்.
தற்போது, மின் விளக்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b