சென்னையில் உள்ள நட்சத்திர தொகுதியான கொளத்தூர் - தொகுதியைப் பற்றிய ஒரு பார்வை....
சென்னை, 24 மார்ச் (ஹி.ச.) சென்னையில் உள்ள நட்சத்திர தொகுதியான கொளத்தூர் பரபரப்பாகவே காணப்படுகிறது. ஏனென்றால், திமுக தலைவரும், முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதி கொளத்தூர். தமிழகத்தில் அதிக எதிர்பார்ப்புக்குரிய தொகுதியாகும். எனவே, கொளத்தூர் தொ
kolathur-constituency


சென்னை, 24 மார்ச் (ஹி.ச.)

சென்னையில் உள்ள நட்சத்திர தொகுதியான கொளத்தூர் பரபரப்பாகவே காணப்படுகிறது.

ஏனென்றால், திமுக தலைவரும், முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதி கொளத்தூர். தமிழகத்தில் அதிக எதிர்பார்ப்புக்குரிய தொகுதியாகும்.

எனவே, கொளத்தூர் தொகுதி பற்றி விரிவாக பார்ப்போம்.

ஆளும் திமுக க கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.

பெரம்பூர், வில்லிவாக்கம் ஆகிய இரு தொகுதிக ளில் சில பகுதிகளைப் பிரித்து கடந்த 2008-இல் கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டது. கடந்த 2011-இல் முதல் பேரவைத் தேர்தலைச் சந்தித்து வருகிறது.

கடந்த 2011 முதல் இந்தத் தொகு தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இதன்காரணமாக நட்சத்திர தொகுதி அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

தமிழகத்தின் 13-வது சட்டமன்றத் தொகுதியான கொளத்தூர், 2011-ஆம் ஆண்டு முதல் திமுக தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் தொகுதியாக இருந்து வருகிறது.

இந்த முறையும் அவர் இத்தொகுதியிலேயே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொளத்தூர் தொகுதி

தமிழகத்தில் உள்ள நட்சத்திர தொகுதிகளில் ஒன்று கொளத்தூர். கொளத்தூர் தொகுதி அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

இத்தொகுதியில் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். குறிப்பாக, விளிம்பு நிலைச் சமூகங்கள், சிறு தொழில் செய்பவர்கள், கூலித் தொழிலாளர்கள், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் தொகுதியாகும். தொகுதியில் வெற்றி, தோல்வியை முடிவு செய்யும் இடத்தில் சிறுபான்மையினரும், பட்டியலினத்தவர்களும் இருப்பதாக தரவுகள் கூறுகிறது.

அடுத்ததாக பார்க்கையில், நாயுடு, வன்னியர், முதலியார் பிரிவினர் இருக்கின்றனர்.

கொளத்தூர் தொகுதி வாக்காளர்கள் :

ஆண் வாக்காளர்கள் - 1 லட்சம் (தோராயமாக)

பெண் வாக்காளர்கள் - 1.08 லட்சம் (தோராயமாக)

மக்கள் முன்வைக்கும் முக்கிய பிரச்சனைகள் என்ன?

முதல்வரின் தொகுதியாக இருந்தாலும், சில அடிப்படை பிரச்சினைகள் தொடர்ந்து மக்கள் தரப்பில் முன்வைக்கப்படுகின்றன.

குறிப்பாக, சாலை வசதிகள் போதிய அளவில் இல்லாதது, மழைக்காலங்களில் வெள்ளப் பிரச்சினைகள் அதிகரிப்பது, கழிவுநீர் வடிகால் வசதிகள் குறைவு போன்றவை முக்கியமாக கூறப்படுகின்றன. இவற்றுக்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், கொளத்தூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளும் நடைபெற்று வருகின்றன. குளங்கள் மறுசீரமைப்பு, புதிய சாலைகள் அமைத்தல், பூங்காக்கள், நூலகங்கள், மினி ஸ்டேடியம், வீட்டு வசதி திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை நகரின் முக்கிய நகர்ப்புற தொகுதிகளில் ஒன்றாகவும் இது விளங்குகிறது.

எதிராக பேசியவர்கள் கூறியதாவது,

5 வருடங்களில் கடைசி ஒரு வருடத்தில் தான் நலத்திட்டங்களை செய்து வருகிறார். மக்களுக்கு தேவைகள் அதிக இருக்கும் போது ஏசி பஸ் ஸ்டாண்ட், பார்க் தேவையா என கேள்வி எழுப்பினர்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டினர். அதிகமான மக்களுக்கு ரேஷன் கார்ட்டுக்கு ரூ.1000 வழங்கப்படவில்லை எனவும் கூறினர்.

கொளத்தூர் தொகுதியில் முக் ஸ்டாலினுக்குப் பெரும் ஆதரவு இருந்தாலும், அதற்கு எதிரான கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்த தொகுதியில் திமுக வெற்றி வாய்ப்பு அதிகம் எனக் கருதப்படுகிறது.

ஆனால், மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், 2026 தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் அவர் போட்டியிடலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தரப்பில் சௌந்தரபாண்டியன் வேட்பாளராக களமிறக்கப்படுகிறார்.

Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV