Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 25 மார்ச் (ஹி.ச.)
புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 16 -ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை நடைபெற்றது.
மொத்தம் 442 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நேற்று (மார்ச் 24) மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது.
மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் மார்ச் 26-ஆகும்.
அதே நாளில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
பல கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் போட்டியிட்டாலும், முக்கிய போட்டி ஆளும் என்.ஆர். காங்கிரஸ்–பாஜக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி இடையே தான் நிலவுகிறது.
என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளில், பாஜக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அதே சமயம் அ.தி.மு.க மற்றும் லாட்டரி தொழிலதிபரின் மகன் சார்ல்ஸ் மார்ட்டின் தலைமையிலான லட்சிய ஜனநாயகக் கட்சி தலா 2 தொகுதிகளில் களம் காண்கின்றன.
இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.இநதியா கூட்டணியில் காங்கிரஸ் 16, திமுக 13 மற்றும் விசிகவுக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
காங்கிரஸ் மற்றும் வி.சி.க வேட்பாளர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இன்று அவர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வி.சி.க-வுக்கு உழவர்கரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வி.சி.க.கட்சி தலைவர் திருமாவளவன் புதுச்சேரியில் மூன்று தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அதன் கூட்டணியில் நேரு எம்.எல்.ஏ-வின் நேயம் மக்கள் கழகம் உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதற்கிடையில், என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பா.ம.க தனித்து போட்டியிடுகிறது.
அ.தி.மு.க–பா.ஜ.க கூட்டணியில் தமாகாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அவர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
ஜான் பாண்டியனுக்கு ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது.
முத்தியால்பேட்டை தொகுதியில் சரவணன், பாகூர் தொகுதியில் இளவரசி, திருபுவனை தொகுதியில் தட்சிணாமூர்த்தி, லாஸ்பேட்டை தொகுதியில் ராஜாங்கம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
அதேபோல் சசிகலா–ராமதாஸ் கூட்டணியில், சசிகலாவின் கட்சியிலிருந்து உழவர்கரை தொகுதியில் லாவண்யா, நெட்டப்பாக்கம் (தனி) தொகுதியில் சிலம்பரசன், வில்லியனூர் தொகுதியில் நந்தகோபால், இந்திராநகர் தொகுதியில் ஜெயபால் (எ) செங்கேணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ராமதாஸ் தலைமையிலான பா.ம.க சார்பில் மாநில அமைப்பாளர் கணபதி “ஜனநாயக பாதுகாப்பு கழகம்” என்ற பெயரில் மணவெளி தொகுதியில் போட்டியிடுகிறார்.
Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV