Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 25 மார்ச் (ஹி.ச.)
மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த வாழ்விடத் திட்டமான Ananya’s Nana Naniயின் Phase 7 வீடுகள் ஒப்படைப்பு விழாஇன்று கோயம்புத்தூரில் விமர்சையாக நடைபெற்றது.
15 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இத்திட்டம், ஏற்கனவே 6 கட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
5000-க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் வசித்து வரும் நிலையில், 355 வீடுகள் கொண்ட Phase 7 இந்நிகழ்வில் பயனாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது.
இதன் மூலம் முழுமையான வசதிகளுடன் செயல்படும் சமூகமாக இத்திட்டம் மேலும் வலுவடைந்துள்ளது.
இத்திட்டத்தின் விரிவாக்கமாக Phase 8, Phase 9 மற்றும் Phase 10 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிகழ்வின் முக்கிய அம்சமாக ஸ்ரீ கல்யாண சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேலும், 20 அடி உயர முருகன் சிலை பக்தர்களுக்கு ஆன்மிக உணர்வை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சியை முன்னிட்டு மார்ச் 24 அன்று தேச மங்கைஅரசி ஆன்மிக சொற்பொழிவு வழங்கினார்.
தொடர்ந்து ஸ்ரீ சந்தீப் நாராயண் மற்றும் குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN