தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ள முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தூத்துக்குடி, 25 மார்ச் (ஹி.ச.) தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ள முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக,தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூற
தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ள முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


தூத்துக்குடி, 25 மார்ச் (ஹி.ச.)

தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ள முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக,தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் முப்படையைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

எனவே தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ள, 65 வயதிற்கு உட்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் (JCO’s) மற்றும் இதர தரவரிசை முன்னாள் படைவீரர்கள் (OR), தூத்துக்குடியில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

விருப்பம் உள்ளவர்கள் தங்களது படைவிலகல் சான்று (Discharge Book) மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று, உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து விருப்பக் கடிதத்தைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு தூத்துக்குடி உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b