Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 மார்ச் (ஹி.ச.)
அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியின் தந்தை மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
அரசியல் விமர்சகரும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவருமான ரவீந்திரன் துரைசாமியின் தந்தை ஸ்ரீகிருஷ்ணன் அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அன்புத் தந்தையை இழந்து வாடும் திரு.ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு எனது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b