Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 மார்ச் (ஹி.ச)
சென்னை ஆவடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி நோக்கி இருசக்கர வாகனத்தில் இருவர் சென்று கொண்டிருந்தனர் செங்கல்பட்டு அருகே மாமண்டூர் பாலாற்று மேம்பாலத்தில் சென்று கொண்டிருக்கும் போது பின் தொடரந்து வந்த டாராஸ் லாரி இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வந்த அபினேஷ் மற்றும் ஜான் சார்லஸ் கென்னடி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த படாளம் போலீசார் விபத்தில் உயிரிழந்த உருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வத்தனர். உயிரிழந்த இருவரும் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்தவர் என தகவல் கிடைத்தது.
விபத்து காரணமாக சென்னை - திருச்சி மற்றும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
படாளம் போலீசார், ரோந்து போலீசாரும் தொர்ந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். செங்கல்பட்டு அருகே மாமண்டூர் பகுதியில் சென்னை திருச்சி - தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN