Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 மார்ச் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த குணசேகரன் சேப்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய படி பொதுப்பணி துறை அலுவலகத்தில் பணியாற்றி, வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குரோம்பேட்டையில் நடந்த உறவினருடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று., புறநகர் ரயில் மூலமாக பூங்கா ரயில் நிலையம் வந்தவர்., தங்கி இருக்கக்கூடிய சேப்பாக்கம் கெஸ்ட் ஹவுஸ் செல்வதற்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது., அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் குணசேகரனிடம் ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.
பணம் தராததால் அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தலையில் வெட்டி விட்டு தப்பியோடினர்.
இரத்த காயத்துடன்
குணசேகரன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதேபோல்,வால்டக்ஸ் சாலையில் கே ஜே ஆர் பிரியாணி கடை ஊழியரான முகமத் சந்து என்பவரிடம்., கஞ்சா இருக்கிறதா எனக்கேட்டு தகராறில் ஈடுபட்ட இருவர்., கத்தியால் பிரியாணி கடை ஊழியரை தாக்கி தப்பியோடினர்.
இரு சம்பவங்களையும் செய்தது ஒரே கும்பலா என, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து.
வழக்கு பதிவு செய்த பூக்கடை போலீசார், பணம் பறிக்க முயன்ற அந்த கும்பலை தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ