மெரினா லூப் சாலை ஆக்கிரமிப்பு அகற்றக் கோரிய வழக்கு வாபஸ் – சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி
சென்னை, 25 மார்ச் (ஹி.ச.) சென்னை மெரினா லூப் சாலையில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், அவற்றை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இ
Loop


சென்னை, 25 மார்ச் (ஹி.ச.)

சென்னை மெரினா லூப் சாலையில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், அவற்றை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, மெரினா லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதே கோரிக்கையுடன் மீண்டும் வழக்கு தொடரப்படுவது எப்படி என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை செயல்படுத்தவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து மனுதாரர் தனது வழக்கை திரும்ப பெற விருப்பம் தெரிவித்தார். அதனை பதிவு செய்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், ஏற்கனவே வழங்கப்பட்ட உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தாததாக குற்றச்சாட்டு இருந்தால், அதற்காக உரிய முறையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் எனவும் நீதிமன்றம் மனுதாரருக்கு அறிவுறுத்தியது.

Hindusthan Samachar / P YUVARAJ