தி.மு.க கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு- தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது
சென்னை, 25 மார்ச் (ஹி.ச.) வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்திடம் தொகுதி பங்கீடு குறித்து கலந்து பேசியதில்,உடன்பாடு ஏற்பட்டதால் தேச
h


சென்னை, 25 மார்ச் (ஹி.ச.)

வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்திடம் தொகுதி பங்கீடு குறித்து கலந்து பேசியதில்,உடன்பாடு ஏற்பட்டதால் தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ்நாட்டில் 10-சட்டமன்றத் தொகுதிகள் போட்டியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் -பிரேமலதா விஜயகாந்த்முன்னிலையில், திமுக-தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தில், நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திமுக தலைவரும், முதல்வர் மு.க.ஸ்டாலினும்- தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும் தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில்,மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி-கவுக்கு, தமிழ்நாட்டில் 10 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யபட்டது.

இவ்வாறு அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / Durai.J