தமிழ்நாட்டில் நாளை முதல் வெயில் அதிகரிக்கக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, 25 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாட்டில் நாளை முதல் வெயில் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழ்நாட்டில் நாளை முதல் வெயில் அதிகரிக்கக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


சென்னை, 25 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் நாளை முதல் வெயில் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதே போல், நாளை மறுநாள் கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் லேசான மழை பெய்யக்கூடும்.

வரும் சனிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இன்று இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.

நாளை முதல் 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பில்லை.

அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM