Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 25 மார்ச் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் மானகிரி பகுதியைச் சேர்ந்த அருளானந்தம் அருள்சாமி,
உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறியதாவது:
திருவண்ணாமலையை தலைமை இடமாகக் கொண்டு ரைஸ் ஆலயம் நிதி நிறுவனம் செயல்பட்டு
வந்ததாகவும் அதன் கிளை நிறுவனத்தை காரைக்குடியில் நடத்துவதாகவும் ராஜா என்பவர் எனக்கு அறிமுகமானார்.
மேலும் தங்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல
மடங்கு லாபம் பெறலாம் என்றும் ஆசை வார்த்தை கூறினார்.
அவரது வார்த்தையை நம்பி
ரூ 20 லட்சத்தை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தேன்.
ஆனால் அவர்கள்
தெரிவித்ததைப் போல முதிர்ச்சி தொகையை தராமல் மோசடி செய்தனர். நிதி நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்த ராஜா என்னை போன்ற பலரிடம் சுமார் 300 கோடி வரை மோசடி செய்துள்ளார்.
ஏராளமானவர்கள் அளித்த புகாரின் பேரில் சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதல் தகவல்
அறிக்கை பதிவு செய்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
அந்த வழக்கில் நிதி நிறுவன மோசடி செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரைக்கும்
எடுக்கவில்லை.
எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, இந்த நிதி நிறுவன மோசடி வழக்கை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் விசாரணையின்
முன்னேற்றம் குறித்த விவரங்களை ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் மதுரை சி.பி.ஐ.
போலீஸ் சூப்பிரண்டுவிடம் தெரிவிக்க வேண்டும்.
சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த
விசாரணையை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / GOKILA arumugam