தமிழ்நாடு முழுவதும் தனியார் பால் விலை உயர்வு!
சென்னை, 25 மார்ச் (ஹி.ச.) தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பால் நிறுவனமாக விளங்கி வரக்கூடிய ஹட்சன் நிறுவனம் ஆரோக்கிய பால் என்ற பெயரில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இந்த துறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வரை ஒரு லி
பால் விலை உயர்வு


சென்னை, 25 மார்ச் (ஹி.ச.)

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பால் நிறுவனமாக விளங்கி வரக்கூடிய ஹட்சன் நிறுவனம் ஆரோக்கிய பால் என்ற பெயரில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இந்த துறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வரை ஒரு லிட்டர் பால் ரூ.70-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 73 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் அரை லிட்டர் பால் 38 ரூபாய்க்கு பதில் 39 ரூபாய் என விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

அரசு பால் நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் போதிய அளவிற்கான எலைட் முறை பால்கள் விற்பனைக்கு இல்லாததை சாதகமாக்கிக் கொள்ளும் தனியார் பால் நிறுவனங்கள் இவ்வாறு அவ்வப்போது பாலின் வழியை உயர்த்தி வந்த நிலையில் தற்போது திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான பாலின் விலை கடந்த சில வருடங்களாக விலை உச்சத்தை எட்டி உள்ளது என்றே சொல்லலாம்.

சில வருடங்களுக்கு முன்பு அரை லிட்டர் பால் 26 முதல் 30 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 39 ரூபாய்க்கும் 65 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த பாலின் விலை தற்போது மெல்ல மெல்ல உயர்ந்து 73 ஆகவும் தற்போது விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / GOKILA arumugam