என்டிஏ கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் – இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு
சென்னை, 25 மார்ச் (ஹி.ச.) தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. இதனால் பாமக எந்தெந்த பகுதிகளில் போட்டியிடுகிறது என்ற எதிர்பார்ப்பு
PMK Advocate Balu


சென்னை, 25 மார்ச் (ஹி.ச.)

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.

இதனால் பாமக எந்தெந்த பகுதிகளில் போட்டியிடுகிறது என்ற எதிர்பார்ப்பு கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அதன்படி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, சோளிங்கர், அம்பத்தூர், குமிடிபூண்டி, திருப்போரூர், உத்திரமேரூர், போளூர், செஞ்சி, விக்கிரவான்டி, வானூர், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், மயிலாடுதுறை, ஜெயங்கொண்டம் மற்றும் இராதாபுரம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் பாமக போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பட்டியலில் வடதமிழக மற்றும் வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த பல முக்கிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளதால், அந்த பகுதிகளில் பாமகக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

குறிப்பாக தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, சேலம் வடக்கு, சேலம் மேற்கு போன்ற தொகுதிகள் பாமக வலுவாகக் கருதப்படும் பகுதிகளாக பார்க்கப்படுகின்றன.

மேலும், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் சவுமியா அன்புமணி போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த தொகுதி அரசியல் ரீதியாக முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.

இன்று வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் பாமக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்த தெளிவான தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ