பழனி தண்டாயுதபாணி சுவாமி உண்டியல் காணிக்கை ரூ.3.53 கோடியை தாண்டியது
திண்டுக்கல், 25 மார்ச் (ஹி.ச.) அறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி மற்றும் திருஆவினன்குடி கோயில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கூட்டத்தால் திருக்கோயில் பக்தர்கள் காணிக்கை உண்டியல்கள் நிரம்பியது. இதையடுத்து உண்டியல்கள் திற
Undiyal


திண்டுக்கல், 25 மார்ச் (ஹி.ச.)

அறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி மற்றும் திருஆவினன்குடி கோயில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கூட்டத்தால் திருக்கோயில் பக்தர்கள் காணிக்கை உண்டியல்கள் நிரம்பியது.

இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கை வரவு ரூபாய் 3 கோடியே 53 இலட்சத்து 25 ஆயிரத்து 665 கிடைத்தது.

உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 576 கிராமும், வெள்ளி 8 ஆயிரத்து 886 கிராமும் கிடைத்தது.

மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 1630 ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பழனியாண்டவர் கல்லூரி மாணவியர், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் எண்ணிக்கையில் ஈடுபட்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN