நீலகிரியில் தெலுங்கு பட நடிகர் பிரேமாஜிராவிடம் ரூ 1,96,500 பறிமுதல்
நீலகிரி, 25 மார்ச் (ஹி.ச.) தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . சுற்றுலா பயணிகளிடம் 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் இருந்தால் அதை தேர்தல் பறக்கும்
Premaji Rao


நீலகிரி, 25 மார்ச் (ஹி.ச.)

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .

சுற்றுலா பயணிகளிடம் 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் இருந்தால் அதை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வந்தனர் .

ஆனால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சுற்றுலா வரும் இடங்களில் தாங்கள் கொண்டு வரும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்வது அதிர்ச்சி அளிப்பதாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர் .

இதனையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் சுற்றுலாப் பயணிகள் கொண்டு வரும் பணத்திற்கான ஆவணங்கள் சரி பார்த்த பின் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தது.

இந்த நிலையில் கூடலூரில் தெலுங்கு திரைப்பட நடிகர் பிரேமாஜி ராவ் வந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தபோது 1,96,500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்,

பின்பு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்பு தேர்தல் அதிகாரிகள் பணத்தை திருப்பிக் கொடுத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN