Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 25 மார்ச் (ஹி.ச.)
புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி மாநில காவல் துறையினர், தேர்தல் அதிகாரிகள் மற்றும் துணை ராணுவ படையினர் சேர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மதியம் சென்னையில் இருந்து வேனில் கொண்டுவரப்பட்ட நகைகள் பிரபல நகை கடையில் கொடுக்கப்பட்டது.
மீண்டும் அங்கிருந்த நகைகளை எடுத்துக்கொண்டு சென்னைக்கு வேன் இரவு புறப்பட்டது.
இதனிடையே, சாரம் பகுதியில் தேர்தல் அதிகாரி அர்ஜுன் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வாகனத்தை சோதனை நடத்தி கொண்டிருந்தனர்.
அவ்வழியாக வந்த வேனை மடக்கிய போது வேனில் ஐந்து பெட்டிகளில் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.
இவற்றின் மதிப்பு 5 கோடி ரூபாய் என தெரிகிறது. சென்னை பல்லாவரத்தில் உள்ள ஒரு நகைக் கடைக்கு இந்த நகைகள் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இருப்பினும் உரிய ஆவணங்களை காண்பிக்க தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து நகை கடை ஊழியர்கள் ஆவணங்களை காண்பிக்க அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam