புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி தான் - சூளுரைத்த முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரி, 25 மார்ச் (ஹி.ச.) புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ள அரசியல் கட்சிகள் தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட சுல்தான்பேட்டையில் இஸ்லாமியர் ஒருவரின் திருமண விழாவி
ரங்கசாமி


புதுச்சேரி, 25 மார்ச் (ஹி.ச.)

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ள அரசியல் கட்சிகள் தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட சுல்தான்பேட்டையில் இஸ்லாமியர்

ஒருவரின் திருமண விழாவில் முதலமைச்சரும் என் ஆர் காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி சிறப்பு விருந்தினராக

பங்கேற்றார்.

அங்கு அவருடன் வில்லியனூரில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும்

வேட்பாளர் ரவிக்குமார் உடன் வந்தார்.

அப்பொழுது விழாவில் பங்கேற்ற மணமக்களை

வாழ்த்திய முதலமைச்சர் ரங்கசாமியிடம் இஸ்லாமிய மக்கள் ஒன்று கூடி ரவிக்குமாரை வெற்றி பெற செய்வோம்.

எங்கள் பகுதி ஓட்டும் முழுமையாக என்.ஆர்.காங்கிரசுக்கு

தான்.

என உறுதி அளித்தனர்.

மீண்டும் நீங்கள் தான் முதலமைச்சராக வரவேண்டும் எனவும் பல திட்டங்களை செய்ய முதலமைச்சராக நீங்கள் தான் வரவேண்டும் எனவும் அங்கிருந்த மக்கள் கூறினர்.

அவர்களுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் ரங்கசாமி வெளியே செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி

வெற்றி நிச்சயம்.

விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

காங்கிரஸ்- திமுக கூட்டணியில் இன்னும் தொகுதிகள் முடிவாகவில்லையே..?

என்ற கேள்விக்கு,

மக்களுக்கே தெரியும் என முதலமைச்சர் பதிலளித்தார்.

முன்னாள்

முதலமைச்சர் நாராயணசாமிக்கு சீட்டு வழங்காதது குறித்து கேட்டதற்கு,

அது

அவர்களது கட்சியின் நிலைப்பாடு.

அவரது கட்சியோட முடிவு எனக்கூறி விட்டு புறப்பட்டார்.

Hindusthan Samachar / GOKILA arumugam