ஸ்கூபா டைவிங் குழுவினரை வைத்து மீட்ட பெண்ணின் உடல்
சிவகங்கை, 25 மார்ச் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் திருப்புவணம் அருகேவுள்ள சொட்டத்தட்டி கிராமத்தைச் சேர்ந்த நிறைகுலத்தான் என்பவர் தனது சகோதரி சரஸ்வதியை காணவில்லை என கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி அன்று திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பலி


சிவகங்கை, 25 மார்ச் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் திருப்புவணம் அருகேவுள்ள சொட்டத்தட்டி கிராமத்தைச் சேர்ந்த நிறைகுலத்தான் என்பவர் தனது சகோதரி சரஸ்வதியை காணவில்லை என கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி அன்று திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காவல்துறை இந்த புகாரின் மீது விசாரணை மேற்கொண்டதில் சரஸ்வதியை மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவரிடம் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.

காவல்துறை தீவிர விசாரணை செய்ததில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி அன்று சரஸ்வதியை சரவணக்குமார் அழைத்துச் சென்றுள்ளார் இருவரும் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சரவணகுமார் சரஸ்வதியை அடித்து கொலை செய்து சாக்கில் கட்டி ஆழமான கிணற்றில் வீசி சென்று உள்ளார் என்பது காவல்துறைக்கு தெரிய வந்தது.

காவல்துறை தீவிர விசாரணையின் அடிப்படையில் அந்த கிணற்றை கண்டுபிடித்து சரஸ்வதியின் உடலை மீட்பதற்காக சென்னையில் இருந்து ஸ்கூபா டைவிங் குழுவினரை வரவழைத்து சரஸ்வதி உடலை தற்போது கைப்பற்றியுள்ளனர்.

14 நாட்களுக்குப் பின்னால் சரஸ்வதி உடல் ஆழமான கிணற்றிலிருந்து கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam