சிவகங்கை இளைஞர் கஸ்டடி மரணம் தொடர்பான வழக்கு - எச்சரித்து மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
சென்னை, 25 மார்ச் (ஹி.ச.) மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சிவகங்கை இளைஞர் ஆகாஷின் மரணத்திற்கு காரணமான காவல்துறையினரை கைது செய்து எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட
உயர்நீதிமன்ற மதுரை கிளை


சென்னை, 25 மார்ச் (ஹி.ச.)

மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், சிவகங்கை இளைஞர் ஆகாஷின் மரணத்திற்கு காரணமான காவல்துறையினரை கைது செய்து எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவும், தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும் என பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அரசுத்தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் அஜ்மல் கான் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நிதி ஆஜரானார்.

விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நீதித்துறை நடுவர் 196 பிரிவின் கீழ் வாக்குமூலம் பெற்றுள்ளார் . விசாரணை சரியான முறையில் சென்று வருகிறது.

அரசே தாமாக முன்வந்தே சிபிசிஐடிக்கு மாற்றியது.

தனி நீதிபதி இந்த வழக்கை விசாரித்து வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்துள்ளார்.வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டும், இதுவரை உடலைப் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில்,

இதுவரை காவல் துறையினர் கைது செய்யப்படவில்லை என்பதாலேயே குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.

அரசுத்தரப்பில், 7 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொதுநல வழக்கு எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இது உதாரணம்.

இது தொடர்பான புகார் மனு 22 ஆம் தேதி மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. 23ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில்,

அவசரம் கருதியே விரைவாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், என்ன அவசரம்? உடலை பெற வேண்டாம் என தடுத்தது யார்? அதற்கு பொறுப்பு நீங்கள் தானே? நீதிமன்றத்தை உங்களின் தனிப்பட்ட விருப்பத்திற்காக பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்து, உடல் அங்கேயே அழுகிவிட வேண்டுமென விரும்புகிறீர்களா? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, இது போன்ற வழக்குகளை நீதிமன்றம் ஏற்க இயலாது.

அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டும், உடலை பெறாமல் இருப்பது ஏன்? உடலை பெற்று முறையாக இறுதி மரியாதை செய்ய வேண்டும். அதை விடுத்து உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்கத்தக்கது அல்ல என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை வேறு காரணத்திற்காக தாக்கல் செய்துள்ளது போல் தெரிகிறது. தற்போது உடலை வைத்து போராட்டம் நடத்துவது fashion ஆக உள்ளது.

உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட வேண்டியது அடிப்படை உரிமை. அதனை குடும்பத்தினரை உறுதி செய்ய வேண்டும்.

இந்த மனு விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டது என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam