சட்டசபை தேர்தலில் இருந்து விலகியது ஏன்? - தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விளக்கம்
சென்னை, 25 மார்ச் (ஹி.ச.) கடந்த 2021 சட்டசபை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டியிட்டு வென்றார். திமுக கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய வேல்முருகன
சட்டசபை தேர்தலில் இருந்து விலகியது ஏன்? - தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விளக்கம்


சென்னை, 25 மார்ச் (ஹி.ச.)

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டியிட்டு வென்றார்.

திமுக கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய வேல்முருகன் தான் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று தற்போது அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:

நாம் சட்டமன்றத்தில் சந்தித்த இன்னல்கள், பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்பதை உணர்ந்த நீங்கள் தலைவனாக ஏற்றுக்கொண்ட வேல்முருகன் தான் தேர்தல் காலத்தில் ஒட்டுமொத்த ஊடகங்களும் யார் யாருடன் கூட்டணி சேர்கிறார்கள்? யார் யார் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறார்கள்? என்று பரபரப்பான செய்திக்காக காத்திருக்கின்றன.

ஆக இந்த சூழலில் கடலூர் மாவட்ட செயற்குழு, பொதுக்குழு, ஒன்றிய, மாவட்ட அளவிலான கூட்டங்களில் முன்னணி அமைச்சர்களையே வைத்து கொண்டு என்னை குறித்தும், எப்போதும் பார்த்தாலும் கூட்டணிக்கு (பண்ருட்டி தொகுதி) தந்து விடுகிறீர்கள்? நாங்கள் எப்போது எம்எல்ஏ ஆவது? என்று திமுக பிரமுகர்கள் பேசினர்.

கடலூர் மாவட்ட 2 அமைச்சர்கள் முன்னிலையிலும், கடலூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக வந்த கேஎன் நேரு இருக்கும் மேடைகளிலும் பேசினார்கள்.

மூத்த அமைச்சர்களாக இருந்தாலும் கூட கூட்டணி கட்சி தலைவரை அப்படி விமர்சனம் செய்யக்கூடாது? இது முறையல்ல? தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு ஆகிறது? பத்திரிகையாளர்கள் உள்ளனர்? என்று கண்டிக்கவில்லை. அப்போது வருத்தம் ஏற்பட்டது.

அதேபோல் எனது சட்டசபை தொகுதிக்கு மக்களுக்காக திட்டங்கள் கொண்டு வரும்போது அதனை கேவலம் கமிஷன் தொகைக்காக சில திமுக நிர்வாகிகள் நடந்து கொண்டனர். அரசு விழா மேடைகளை ஆக்கிரமித்த சம்பவம், ஒரு விழாவில் கோட்டாச்சியரையே அமரவிடாமல் ஒன்றிய செயலாளர் அவரை எழும்பி செல்லும்படி கூறியது என இதுபோன்ற அரசு விழாக்களில் தலையீட்டு பொங்கல் பரிசு, உதவித்தொகைகளை அறிவிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

பெரியண்ணன் மனப்பான்மையில் ஆளும் கட்சியியின் கடைநிலை நிர்வாகிகள் முதல் மேல்நிலை நிர்வாகிகள் வரை நடந்து கொண்ட வருத்தம். தேர்தலில் போட்டியில்லை இதையெல்லாம் கருத்தில் கொண்டு நான் பண்ருட்டி நிர்வாகிகளை அழைத்து பேசினேன். இனி பண்ருட்டி தொகுதியில் நிற்கப்போவது இல்லை என்று கூறினேன். பண்ருட்டி தொகுதி மட்டும் இல்லாமல் வரும் சட்டசபை தேர்தலில் ஒட்டுமொத்தமாக நான் விடுபட்டு கட்சிக்கு உழைத்த முன்னணி தலைவர்களுக்கு வாய்ப்பை வழங்குகிறேன்.

மீண்டும் பண்ருட்டியில் இடம் கொடுத்தால் கூட கட்சியின் மூத்த தலைவர்களை நிறுத்துகிறேன். நான் தமிழ்நாடு முழுவதும் கட்சி பணிகளை மேற்கொள்ள இருக்கிறேன்.

இதற்காக அனைவரும் பொறுத்து கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கூட்டத்தை ஏற்பாடு செய்ய நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b