திமுக கூட்டணியில் 8 சீட்டுகளை வாங்கியது ஏன்?தொண்டர்களிடம் திருமாவளவன் விளக்கம்
சென்னை, 25 மார்ச் (ஹி.ச) திமுக கூட்டணியில் 8 சீட்டுகளை வாங்கியது ஏன்? என தொண்டர்களிடம் திருமாவளவன் முகநூல் பக்கத்தின் நிலையில் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் தெரிவித்துள்ளதாவது, திமுக கூட்டணியில் 8 இடங்கள
Thiruma


சென்னை, 25 மார்ச் (ஹி.ச)

திமுக கூட்டணியில் 8 சீட்டுகளை வாங்கியது ஏன்? என தொண்டர்களிடம் திருமாவளவன் முகநூல் பக்கத்தின் நிலையில் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் தெரிவித்துள்ளதாவது,

திமுக கூட்டணியில் 8 இடங்களை பெற்றுள்ளோம்.6 தனி தொகுதி,2 பொது தொகுதிகளில் போட்டியிட உள்ளோம்.

கட்சியின் உயர்நிலை குழு கூட்டத்தில் 10 சீட் அல்லது அதற்கு கூடுதலான இடங்கள் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி,ஆட்சி அமைக்க விரும்பும் கட்சி,அதற்கான வலிமையும் கொண்ட கட்சி,எனவே அவர்கள் ஆட்சி அமைப்பதற்கு ஏற்ப தொகுதிகளில் போட்டியிட வேண்டும்.

2021 சட்டமன்றத் தேர்தலில் 173 இடங்களில் திமுக போட்டியிட்டது, சில கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து உதயசூரியன் சின்னத்தில் 180 இடங்களில் போட்டியிட்டது.

தனிப்பட்ட முறையில் 173 இடங்களில் போட்டியிட்டு 126 இடங்களை தான் திமுகவால் வெற்றி பெற முடிந்தது.

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவை சபாநாயகர் ஒரு வருடம் சேர்த்து 119 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும்.

அவ்வாறு 119 சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாவிட்டால் தொங்கு சட்டசபை உருவாகும், அப்போது கூட்டணி கட்சிகளில் சார்பில் ஆட்சி அமைக்கும் சொல் வரும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு இருக்கும் அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாற்றுக் கருத்து இல்லை.

இந்தத் தேர்தலில் திமுகவால் தனி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால்,திமுகவால் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 119 இடங்களை வெற்றி பெற முடியாமல் போனால் தொங்கு சட்டசபை உருவாகும்.

தொங்கு சட்டசபை உருவானார் பாஜக அதிமுக சார்பிலும் ஆட்சி அமைக்கும் ஆட்சி அமைக்க முயற்சி செய்வார்கள். அதே நேரத்தில் மற்ற எம்எல்ஏக்களிடம் விலை பேசுவார்கள் இது இந்தியா முழுவதும் நடைபெறும் ஒன்று.

தற்போது கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கின்ற கோரிக்கையை நாம் முன் வைக்கவில்லை. அது எதிர்க்கட்சியினருக்கு சாதகமாக அமைந்து விடும் என்ற அச்சம் உள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு கூடுதலான இடங்கள் பெற்று தேர்தலை சந்தித்தால் திமுகவால் தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டால் தமிழகத்தின் அரசியல் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும்.

திமுக தனிப்பெரும்பான்மையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 125 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

தேர்தல் களத்தில் எந்த ஒரு கட்சியும் போட்டியிடும் தொகுதிகளில் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெற முடியாது.

எவ்வளவு நன்மதிப்பு இருந்தாலும், எவ்வளவு முனைப்புடன் நாம் களப்பணி ஆற்றினாலும், எவ்வளவு பொருளாதாரத்தைக் கொட்டி செலவு செய்தாலும் 70% என்ற அளவில் தான் வெற்றி பெற முடியும்.

திமுக 125 இடங்களில் வெற்றி பெற வேண்டுமானால் அதைவிட கூடுதலாக 20 அல்லது 30 இடங்களில் அவர்கள் போட்டியிட வேண்டும்.

தோராயமாக திமுக 160 முதல் 170 இடங்களில் போட்டியிட்டால் மட்டுமே 125 இடங்கள் முதல் 120 இடங்களை பெற முடியும்.

திமுக கூட்டணி கட்சிகளுக்கு 70-க்கும் மேற்பட்ட இடங்களை கொடுக்க வேண்டி உள்ளது. அவர் கொடுக்கும் சொல்லில் அவர்கள் 165 இடங்கள் வரை போட்டியிட வாய்ப்பு உள்ளது.

150 இடங்களில் போட்டியிடுங்கள் என நாம் திமுகவை சொல்ல முடியாது .அந்த எண்ணிக்கையில் போட்டியிட்டால் 120 இடங்களுக்கும் குறைவான சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தால் தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுவிடும்.

நாம் கூடுதல் இடங்கள் கேட்டதன் மூலம் திமுக கூட்டணி வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டால், திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டால் தமிழக அரசியலில் திசை மாறும்.

நான் பேசுவது கற்பனை அல்ல, திமுக நமது கொள்கைகளில் இருந்து வேறுபட்டிருக்கலாம்,

திமுகவிற்கு நமக்கும் நிறைய கருத்து முரண்பாடுகள் இருந்திருக்கலாம் இருக்கும்.

திமுக ஆட்சி அமைக்காவிட்டால் அதிமுக ஆட்சி அமைக்கும் அது பாஜகவின் ஆட்சியாக இருக்கும், நடிகர் விஜய் ஆட்சி அமைத்தால் அது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் ஆட்சியாக அமையும்? தமிழகத்தின் அரசியல் திசை வழி மாறி போகும்.

இது எல்லாம் கணக்கில் வைத்துக் கொண்டுதான் யோசித்து தான் நாம் குறைந்த இடங்களை பெற்றுள்ளோம் நாம் போட்டியிடும் எட்டு இடங்களிலும் 100% வெற்றியை பதிவு செய்ய வேண்டும்.

கூடுதல் தொகுதிகளை பெறுவதற்கும் மாநிலங்களவை உறுப்பினர் கேட்பதற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தகுதி உள்ளது.

ஆனால் கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் நாம் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொல். திருமாவளவன் அந்த வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ