Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 25 மார்ச் (ஹி.ச.)
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட கருத்து அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
நெருக்கடியான சூழலில் “எங்கே எங்கள் பங்கு” என்று கேட்பது நல்ல சகோதரத்துவத்தின் அடையாளமாக இருக்க முடியாது; அது தியாகம் அல்ல, கடமை என அவர் தெரிவித்துள்ளார். இந்த கருத்து அவரது ஆழமான அரசியல் புரிதலையும் தொலைநோக்குப் பார்வையையும் வெளிப்படுத்துவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நட்புறவில் எந்த விரிசலும் ஏற்படாத வகையில் நனிநாகரிகமாக தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளதன் மூலம் அவரது அரசியல் முதிர்ச்சி மீண்டும் வெளிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை முன்னிலைப்படுத்தியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் போட்டியிட விரும்பவில்லை; ஆனால் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக தீவிரமாகப் பணியாற்றுவோம்” என்ற கமல்ஹாசன் அவர்களின் நிலைப்பாடு அரசியல் கண்ணியத்தின் எடுத்துக்காட்டாக பார்க்கப்படுவதாகவும், அவரது இந்த முடிவு அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ