Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மார்ச் (ஹி.ச.)
அதிமுகவில் வடசென்னை வடக்கு மேற்கு மாவட்டத்தின் செயலாளர் மோகன் மீது கட்சிக்குள் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் மாவட்ட செயலாளர் மோகனுக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளதால் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வில்லிவாக்கம் மற்றும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட அதிமுக வடசென்னை வடக்கு மேற்கு மாவட்டத்தின் செயலாளராக இருப்பவர் மோகன். இவர் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி மற்றும் கொளத்தூர் சட்டமன்ற பணிகள் இவரது மேற்பார்வையில் நடைபெறுவதாக தெரிகிறது. இந்த நிலையில் இங்கு பொருப்பாளராக உள்ள S.D.S செல்வம், மோகன் உள்ளீட்டோர் பகுதி செயலாளர் பதவிக்கு விஜய் என்பவரை நியமக்க முடிவு செய்துள்ளதால் கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தலைமைக்கு தனித்தனியாக மனு அளித்துள்ளார். பணத்தை வாங்கி கொண்டு பொறுப்பு போடுவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.
சுமார் 30 நாட்களாக வடசென்னை வடக்கு மேற்கு மாவட்டத்தில் எந்த செயல்பாடும் இல்லை கட்சி நிர்வாகிகள் மற்றும் உண்மை விசுவாசிகள் யாரும் செயல்பாடு இல்லாமல் வருத்தத்தோடு இருப்பதாக அதிருப்தியில் இருப்பவர்கள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட செயலாளரை நேரில் சென்று கேட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அதிமுக மகளிரணியினர் மாவட்ட செயலாளர் வீட்டுக்கு சென்றால் எப்போதும் கதவு மூடி இருக்கிறது கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர் மாவட்ட செயலாளரை சந்திக்க சென்றால் அவர் வீட்டில் உள்ளவர்கள் நாயை போல் இல்லை என்று சொல்லி வெளியே துரத்துவதாக மகளிரணியினர் குற்றம் சாட்டி உள்ளனர். இது தொடர்பாகவும் வீடியோ வெளியாகி உள்ளது.
வில்லிவாக்கம் மற்றும் கொளத்தூர் தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இது போன்ற உட்கட்சி பூசல் காரணமாக தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று வில்லிவாக்கம் மற்றும் கொளத்தூர் தொகுதி அதிமுக மூத்த நிர்வாகிகள் வேதனைப்படுகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ