Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மார்ச் (ஹி.ச.)
சென்னை பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்
அ.தி.மு.க வழக்கறிஞர் இன்பதுரை
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது,
கரூரில் மனித பட்டியல் தொடர்பாக மனு அளித்துள்ளோம்.
அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அது ‘பட்டி’ அல்ல, ‘பார்ட்டி ஹால்’ என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் முறையாக மனு அளித்துள்ளோம்.
எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு இவ்வளவு வேகமாக அமைச்சர்கள் பதில் அளிக்கிறார்கள். அந்த வேகத்தை அரசின் திட்டங்களில் காட்ட வேண்டும்” என்று விமர்சித்தார்.
ஒரே ஒரு நாள் எங்கள் தலைவர் பேசியதற்கே இவ்வளவு புலம்பல் இருக்கிறது என்றால், தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டால் அமைச்சர்கள் என்ன ஆவார்கள்? எனவும் கேள்வி எழுப்பினார்.
அதே நேரத்தில், “எங்கள் கூட்டணி ஜெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் திமுக கூட்டணி இன்னும் கிளம்பவே இல்லை. அது ‘ஷேர் ஆட்டோ கூட்டணி’ போல உள்ளது” என்று கடுமையாக தாக்கினார்.
மேலும், நடிகர் குறித்து பேசுகையில்,
அவர் உண்மை நிலையை புரிந்தவர். ஞான திருஷ்டியில் பார்த்துவிட்டார். அதனால் தான் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார் என்று தெரிவித்தார்.
இதனுடன், மாநிலத்தில் நடக்கும் ஆம்ஸ்ட்ராங் மரணம், லாக்கப் டெத் உள்ளிட்ட பல சம்பவங்களை சுட்டிக்காட்டி, அரசின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்தும் இன்பதுரை கேள்வி எழுப்பினார்.
மொத்தத்தில், அதிமுக கூட்டணி வேகமாக முன்னேறி வருகிறது என்றும், எதிர்க்கட்சிகள் இன்னும் தங்களது செயல்பாடுகளை தொடங்காத நிலை உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
Hindusthan Samachar / P YUVARAJ