ஆந்திராவில் டிப்பர் லாரி மீது பேருந்து மோதி தீ எரிந்து விபத்து -13 பேர் பலி!
ஆந்திரா, 26 மார்ச் (ஹி.ச.) தனியார் சொகுசு பேருந்து ஒன்று ஹைதராபாத்தில் இருந்து 40 பயணிகளுடன் நேற்று இரவு புறப்பட்டு ஆந்திர மாநிலம் பாமூர் சென்று கொண்டிருந்தது. இன்று காலை அந்த பேருந்து ஆந்திராவில் உள்ள மார்காபுரம் மாவட்டம் ராயபுரம் அருகே டி
விபத்து


ஆந்திரா, 26 மார்ச் (ஹி.ச.)

தனியார் சொகுசு பேருந்து ஒன்று ஹைதராபாத்தில் இருந்து 40 பயணிகளுடன் நேற்று இரவு புறப்பட்டு ஆந்திர மாநிலம் பாமூர் சென்று கொண்டிருந்தது.

இன்று காலை அந்த பேருந்து ஆந்திராவில் உள்ள மார்காபுரம் மாவட்டம் ராயபுரம்

அருகே டிப்பர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்து ஏற்பட்டவுடன் பேருந்தில் இருந்த பயணிகள் அவசரகால வழி மூலமும் ஜன்னல்களை உடைத்துக் கொண்டும் பேருந்தில் இருந்து குதித்து வெளியேறினர்.

இந்த நிலையில் விபத்து தீ விபத்தாக மாறி பேருந்தில் சில பயணிகள் சிக்கி

கொண்ட நிலையில் அவர்களில் 13 பேர் உயிரோடு எரிந்து இறந்துவிட்டனர்.

மேலும் சில பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார்,

தீயணைப்பு படையினர் ஆகியோர் தீயை கட்டுப்படுத்தி அனைத்து உயிருடன் எரிந்து போன

பயணிகளின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடைபெறுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam