முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராம நவமி வாழ்த்து
சென்னை, 26 மார்ச் (ஹி.ச) ராம பிரான் அவதரித்த தினத்தை ராம நவமி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு ராம நவமி நாளை மார்ச் 27ம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. ராம நவமி விழாவை முன்னிட்டு முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்
Annamalai's Rama Navami Greetings


சென்னை, 26 மார்ச் (ஹி.ச)

ராம பிரான் அவதரித்த தினத்தை ராம நவமி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகின்றனர்.

இந்த ஆண்டு ராம நவமி நாளை மார்ச் 27ம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது.

ராம நவமி விழாவை முன்னிட்டு முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,

அதர்மத்திற்கு எதிரான தர்மத்தின் சின்னமாகத் திகழும், ஸ்ரீ ராமபிரானின் அவதார தினமான ராம நவமி நன்னாளில், அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேர்மை, ஒழுக்கம், நற்பண்பு, நீதியைக் காக்கும் ஶ்ரீராம பிரானின் வாழ்வியல் நெறி, நம் அனைவருக்கும் என்றும் வழிகாட்டியாக இருக்கட்டும்.

ஜெய் ஸ்ரீ ராம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b