Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 26 மார்ச் (ஹி.ச.)
விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டியை சேர்ந்த வீரபாண்டியன் (வயது 23) என்ற
இளைஞர் சிவகாசி பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இன்று
வழக்கம் போல் பணி முடிந்து தனது நண்பர் ராமர் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில்
வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
திருத்தங்கல் புதிய பேருந்து நிலையம்
முன்பாக சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த சரக்கு ஆட்டோ இருசக்கர வாகனம் மீது
மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த
வீரபாண்டியன் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே
பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் ராமர் என்ற இளைஞர் பலத்த காயத்துடன் சிவகாசி
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து
திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam