Enter your Email Address to subscribe to our newsletters

பிலாஸ்பூர், 26 மார்ச் (ஹி.ச.)
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள அரசு கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் (Bird Flu) பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பண்ணையைச் சுற்றிய 10 கிலோமீட்டர் வட்டாரத்தில் கோழிப் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிலாஸ்பூர் மாவட்ட ஆட்சியர் சஞ்சய் அகர்வால்,
ஒரு கோழிப் பண்ணையில் சுமார் 5,500 கோழிகள் உயிரிழந்துள்ளன.
பரிசோதனையில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி (SOP) அனைத்து தடுப்புக் நடவடிக்கைகளும் தற்போது பின்பற்றப்படுகின்றன.
என்று தெரிவித்தார்.
கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் தகவலின்படி, பறவைக் காய்ச்சல் வைரஸ் (H5N1) உலகளாவிய அளவில் வேகமாகப் பரவி வருகிறது.
‘ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா’ எனப்படும் இந்த ஆபத்தான நோய், ஆசியாவில் மட்டும் சுமார் 100 உயிர்களை பறித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இது ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் பரவி உள்ளது.
பறவைகளிடையே மிக வேகமாக பரவினாலும், மனிதர்களிடையே இதுவரை எளிதாகப் பரவவில்லை என்றும் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM