Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 26 மார்ச் (ஹி.ச.)
கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது,
இன்று கடலூர் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் கிடைத்த தகவலின் பெயரில் மோப்பநாய் பீட் உதவியுடன் உதவி ஆய்வாளர் பாபு தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
கடலூரை மையப்பகுதியில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / Durai.J