மார்க்காபுரம் பேருந்து தீ விபத்து - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல்
அமராவதி, 26 மார்ச் (ஹி.ச.) மார்க்காபுரம் மாவட்டம், ராயவரம் அருகே இன்று அதிகாலையில் ஸ்லாப் கல் குவாரிகளுக்கு அருகே ஒரு டிப்பர் லாரி மற்றும் தனியார் பேருந்து இடையே ஏற்பட்ட மோதலில் எட்டு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பலர் தீயி
மார்க்காபுரம் பேருந்து தீ விபத்து - ஆந்திர முதல்வர் நாயுடு இரங்கல், விரிவான அறிக்கை கோரினார்


அமராவதி, 26 மார்ச் (ஹி.ச.)

மார்க்காபுரம் மாவட்டம், ராயவரம் அருகே இன்று அதிகாலையில் ஸ்லாப் கல் குவாரிகளுக்கு அருகே ஒரு டிப்பர் லாரி மற்றும் தனியார் பேருந்து இடையே ஏற்பட்ட மோதலில் எட்டு பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பலர் தீயில் கரிந்து உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிகின்றன.

மேலும்,சுமார் 20 பேர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது குறித்து மார்க்காபுரம் டிஎஸ்பி ஹர்ஷவர்தன் ராஜு கூறியது, பேருந்து ஜகித்யாலாவிலிருந்து காலிகிரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

மோதலுக்குப் பிறகு பேருந்து தீப்பிடித்து முற்றிலும் எரிந்து நாசமானதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விபத்து தொடர்பாக ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் ஆலோசித்து, காயமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ உதவிகளை விசாரித்தார்.

விபத்துக்கான காரணங்களை விசாரணை செய்து முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த விபத்து குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ஆழ்ந்த அதிர்ச்சியையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM